MMC

COVID 19 TEST REPORTS
MADURAI MEDICAL COLLEGE & GOVT RAJAJI HOSPITAL

Covid 19

The COVID19 pandemic, also known as the coronavirus pandemic, is an ongoing global pandemic of coronavirus disease 2019 (COVID19), caused by severe acute respiratory syndrome coronavirus 2 (SARSCoV2).

The outbreak was first identified in December 2019 in Wuhan, China. The World Health Organization declared the outbreak a Public Health Emergency of International Concern on 30 January 2020 and a pandemic on 11 March. As of 1 August 2020, more than 17.5 million cases of COVID19 have been reported in more than 188 countries and territories, resulting in more than 679,000 deaths; more than 10.3 million people have recovered.

The virus is primarily spread between people during close contact, most often via small droplets produced by coughing, sneezing, and talking. The droplets usually fall to the ground or onto surfaces rather than travelling through air over long distances. However, the transmission may also occur through smaller droplets that are able to stay suspended in the air for longer periods of time in enclosed spaces, as typical for airborne diseases. Less commonly, people may become infected by touching a contaminated surface and then touching their face. It is most contagious during the first three days after the onset of symptoms, although spread is possible before symptoms.

கோவிட்-19 பெருந்தொற்று என்பது கடுஞ்சுவாசக் கோளாறு கொரோனாவைரஸ் 2 (SARS CoV 2) என்ற தீநுண்மி காரணமாக ஏற்படும் கொரோனாவைரஸ் நோயின் (கோவிட்19) பெருந்தொற்றாகும். இந்நோயின் தொற்று முதன்முதலில் சீனாவின் ஊகானில் 2019 திசம்பரில் அடையாளம் காணப்பட்டது. இந்த ஆண்டு (2020) ஜனவரி மாதத்தில் கோவிட்-19 தொற்றை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாகவும், 2020 மார்ச் மாதம் ஒரு பெருந்தொற்றாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

இந்த வைரஸ் பெரும்பாலும் மக்களிடையே நெருக்கமான தொடர்பின்போது இருமல், தும்மல் மற்றும் பேசுவது ஆகியவற்றின் மூலம் உருவாகும் சிறிய நீர்த்துளிகள் வழியாகப் பரவுகிறது. இந்த நீர்த்துளிகள் வழக்கமாக நீண்ட தூரம் காற்று வழியாக பயணிப்பதை விட தரையில் அல்லது மேற்பரப்பில் விழுகின்றன. சில நேரங்களில், தொற்றுள்ள மேற்பரப்பைத் தொட்டுவிட்டு, பின்னர் தங்களின் முகத்தைத் தொடுவதன் மூலமாகவும் மக்களுக்குத் தொற்று ஏற்படக்கூடும். அறிகுறிகள் தோன்றிய முதல் மூன்று முதல் நான்கு நாட்களில் தொற்றுப் பரவல் வீரியமாக இருக்கும்,எனினும் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பும், அறிகுறிகளைக் காட்டாத மக்களிடமிருந்தும் தொற்று பரவ சாத்தியமுள்ளது

பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், இருமல், சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் வாசனை உணர்வு இழப்பு ஆகியவை அடங்கும். நோய் தீவிரமடையும்போது நிமோனியா மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படும். அறிகுறிகள் வெளிப்படும் கால இடைவெளியானது முதல் ஐந்து நாட்கள் வரை இருக்கும்; சிலநேரங்களில் இரண்டு முதல் பதினான்கு நாட்கள் வரைக்கூட இருக்கலாம். இத்தொற்றுநோய்க்கு அறியப்பட்ட தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சை எதுவும் இதுவரை நடப்பில் இல்லை. அறிகுறி குறைப்பு சிகிச்சை மற்றும் ஆதரவு சிகிச்சை ஆகியவையே முதன்மை சிகிச்சைகளாக உள்ளன.

பரிந்துரைக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளில் கை கழுவுதல், இருமும்போது ஒருவர் தம் வாயை மூடுவது, மற்றவர்களிடமிருந்து தூரத்தை பராமரித்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் நபர்களைக் கண்காணித்தல் மற்றும் சுய தனிமைப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.